search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருவியில் குழாய் மூலம் கொட்டப்பட்ட தண்ணீர்
    X

    அருவியில் குழாய் மூலம் கொட்டப்பட்ட தண்ணீர்

    • அருவியில் இயற்கையாக நீர்வரத்து இல்லாத நிலையில் அருவியின் மேற்பகுதியில் ஒரு பெரிய பைப் மூலமாக தண்ணீர் கொட்டப்படுவது போன்ற வீடியோ வெளியானது.
    • 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த வீடியோ சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது.

    சீனாவின் மிக உயரமான அருவி என பெயர் பெற்ற யுண்டாய் மலையில் உள்ள அருவியில் குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்படுவது போன்று காட்சி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 314 மீட்டர் உயரம் உள்ள யுண்டாய் அருவி பிரசித்தி பெற்ற யுண்டாய் மலையின் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதிக்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் செல்வது வழக்கம். வழக்கமாக இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக இங்கு செல்வார்கள்.

    இந்நிலையில் இந்த அருவியில் இயற்கையாக நீர்வரத்து இல்லாத நிலையில் அருவியின் மேற்பகுதியில் ஒரு பெரிய பைப் மூலமாக தண்ணீர் கொட்டப்படுவது போன்ற வீடியோ வெளியானது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை குவித்த இந்த வீடியோ சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. யுண்டாய் அருவி சில குழாய்களில் உற்பத்தியாகிறது என கடும் விமர்சனங்களை எதிர்கொண்டதோடு, சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வறட்சி காலங்களில் பார்வையாளர்கள் தங்கள் பயணத்தை பயனுள்ளதாக உணர வேண்டும் என்பதற்காக குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்பட்டதாக பூங்கா பராமரிப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எனினும் பயனர்கள் பலரும் அருவியில் கூடவா டூப்ளிகேட் செய்வது என விமர்சித்து வருகின்றனர்.

    Next Story
    ×