search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    Rahul Gandhi
    X

    என் தந்தை இறந்தபோது அடைந்த துக்கத்தை இந்நேரத்தில் உணர்ந்தேன்: ராகுல் காந்தி உருக்கம்

    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
    • ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    அதன்பின், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி பேசியதாவது:

    என் தந்தையை இழந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ அதே துக்கத்தில்தான் இப்போது இருக்கிறேன்.

    இந்த துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது மிகவும் அவசியம்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருவதை உறுதி செய்ய வேண்டும்.

    வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.

    ஒட்டுமொத்த மக்களும் வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும். இது தேசிய பேரிடர்தான்.

    மக்களுக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ நான் கடமைப்பட்டுள்ளேன்.

    வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது.

    இதற்கு விரைவில் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×