search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் டெல்லி மந்திரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்
    X

    முன்னாள் டெல்லி மந்திரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

    • மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியில் இருந்து விலகி மாயாவதி கட்சியில் இணைந்தார்.
    • பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார்.

    டெல்லி மாநில முன்னாள் மந்திரி ராஜ் குமார் ஆனந்த். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.

    இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்படி ஜூன் 10-ந்தேதி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. ஜூன் 11-ந்தேதி நேரில் வந்து ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போதும் நேரில் வந்து ஆஜராகவில்லை.

    அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 14-ந்தேதி) ஆஜராக இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஆஜராக வரவில்லை. இதனால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த மே 31-ந்தேதி கட்சித் தாவல் தடைசட்டத்தின் கீழ் ஜூன் 10-ந்தேதி பதில் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இது தொடர்பாக ராஜ் குமார் ஆனந்த் கூறுகையில் "தகுதி நீக்கம் குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை கேட்பேன். முழுமையான உத்தரவை பார்த்த பிறகு, சட்டபூர்வ ஆலோசனை கேட்பேன்.

    ராஜ் குமார் ஆனந்த் பட்டேல் நகர் தொகுதியில் இருந்து 2020 டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது போது வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

    பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×