search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    முன்னாள் இந்திய தூதருக்கு சீட் வழங்கிய பா.ஜனதா
    X

    முன்னாள் இந்திய தூதருக்கு சீட் வழங்கிய பா.ஜனதா

    • அமிர்தசரஸ் தொகுதியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு சீட் வழங்கியுள்ளது.
    • ஃபரித்காட் தொகுதியில் ஹன்ஸ் ராஜை நிறுத்தியுள்ளது.

    பா.ஜனதா 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதரான தரன்ஜித் சிங் சந்துவிற்கு சீட் வழங்கியுள்ளது. அதே மாநிலத்தின் ஃபரித்காட் தொகுதியில் ஹன்ஸ் ராஜ்-யை நிறுத்தியுள்ளது. ஹன்ஸ் ராஜ் கடந்த 2019-ல் டெல்லி வடகிழக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஃபரித்காட் எஸ்சி தொகுதியால் தற்போது அங்கே நிறுத்தப்பட்டுள்ளார்.

    லூதியானாவில் ரவ்னீனத் சிங் பிட்டு, பாட்டியாலாவில் பிரினீத் கவுர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பி. மக்டாப்பிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த உடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ரவ்னீனத் சிங் பிட்டு பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். பிரினீத் கவுர் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மனைவி ஆவார். ஜலந்தரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த ரிங்குவிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    பா.ஜனதா மக்களவை தேர்தலில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. ஏற்கனவே இருந்து பல எம்.பி.க்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

    அதேவேளையில் நடிகைகள், வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கியுள்ளதாக விமர்சனமும் எழும்பியுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட கங்கனா ரனாவத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மக்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பா.ஜனதா 411 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது.

    Next Story
    ×