என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
70 வயதை கடந்த அனைத்து இந்தியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை - ஜனாதிபதி திரவுபதி முர்மு
- ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.
- இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.
இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.
அப்போது, "70 வயதை கடந்த அனைத்து இந்திய மக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பலனடைந்து வருவதாக" திரவுபதி முர்மு தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். இதன்மூலம் 12 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.