என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அதானி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
- தொழிலதிபர் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
- அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
புதுடெல்லி:
பிரபல தொழிலதிபரும், உலகின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானி இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் ஏராளமான தொழில்களை நடத்தி வருகிறார். ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அவரது நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதானியின் மருமகனும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி உள்பட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பாக தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இதற்கிடையே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என அதானி குழுமம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள மனுவில், தேச நலனை கருத்தில் கொண்டு உடனடியாக முழு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்