என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
2019-ல் கருப்புப் பெட்டியில் பிரதமர் கொண்டு வந்தது என்ன?- தற்போது கேள்வி எழுப்பும் கேரள மாநில காங்கிரஸ்
- மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
- இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
கேரள மாநில காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளதாவது:-
கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா என்ற இடத்திற்கு விமானப்படையின் ஹெலிகாப்டரில் மூன்று பாதுகாப்பு ஹெலிகாப்டருடன் வந்தார்.
மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து மிகப்பெரிய கருப்பு பெட்டி ஒன்று தனியார் காருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்த பெட்டியை எடுத்துச் சென்றது சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்கள் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பெட்டியில் இருந்தது என்ன?
அது தேர்தலில் பணத்தை வினியோகம் செய்ய பிரதமர் மோடி கொண்டு வந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஐந்து வருடங்கள் கழித்தும் கூட தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. மோடி புனிதர் வேடமணிந்த உண்மையான ஊழல்வாதி.
ஒடிசா மாநிலத்தின் சாம்பல்புர் மக்களவை தொகுதியின் பொது பார்வையாளராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி, நரேந்திர மோடி காருடன் அணிவகுத்து சென்ற காரை சோதனை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பிரதமர் மோடி தேர்தல் பார்வையாளரிடம் எதை மறைக்க வேண்டும்?.
இவ்வாறு அந்த எக்ஸ் பக்க பதிவில் கேரள மாநில காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.