என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கர்நாடகா தேர்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை- கோவா அரசு அறிவிப்பு
- கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கோவாவில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக, மே 10ம் தேதி (நாளை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை கோவா அரசு அறிவித்துள்ளது.
இது தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களுக்கும் உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவர் தாமோதர் கோச்கர், இது மாநில அரசின் அபத்தமான முடிவு என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "கோவாவில் உள்ள தொழில்துறையினர் இது முற்றிலும் அபத்தமான மற்றும் முட்டாள்தனமான முடிவாக கருதுகிறார்கள். மாநில அரசின் இத்தகைய ஒருதலைப்பட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளை பரிசீலித்து வருகிறோம்" என்றார்.
இந்நிலையில், விடுப்பு குறித்து கோவா முதல்வர் அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் போது விடுமுறை அளிப்பது வழக்கம். கடந்த ஆண்டு கோவாவில் தேர்தல் நடந்த அன்று கர்நாடகாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டது" என்றார்.