என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
'சந்திரயான்-3' வெற்றியை கொண்டாடிய 'கூகுள்'
- 'கூகுள்' பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.
- 'டூடுல்' பக்கத்தில் 'சந்திரயான்-3' திட்டத்தின் முழு பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான 'கூகுள்' பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை (கவன ஈர்ப்பு சித்திரம்) வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த சரித்திர சாதனையை கொண்டாடும் வகையில் 'ஜிப்' என்று அழைக்கப்படும் கிராபிக்ஸ் பட வடிவமைப்பில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.
அதில் கண்களை மூடிக்கொண்டு இருக்கும் நிலா தன்னை சுற்றி வரும் சந்திரயான் விண்கலத்தை மிரட்சியுடன் பார்ப்பது போலவும், பின்னர் விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறியதும் நிலா மகிழ்ச்சி ததும்ப சிரிப்பது போலவும் அந்த 'டூடுல்' உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த 'டூடுல்' பக்கத்தில் 'சந்திரயான்-3' திட்டத்தின் முழு பின்னணி தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.