search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குற்ற தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பஜனை பாடும் அரியானா காவல்துறை? - வீடியோ வைரல்
    X

    குற்ற தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பஜனை பாடும் அரியானா காவல்துறை? - வீடியோ வைரல்

    • சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    • அரியானா காவல்துறையோ இந்த வீடியோ குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    அரியானாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி இரண்டாவது முறையாக நயாப் சிங் சைனி முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது.

    இந்த நிலையில், அமைச்சரவை பதவியேற்று சில தினங்களே ஆகும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    57 வினாடிகள் ஓடும் வீடியோவில் பஜனை பாடப்படுகிறது. இதில் என்ன குற்றம் தானே கேட்கிறீர்கள்... பஜனை பாடப்படும் இடம் அரியானா காவல்துறையின் குற்ற தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில்... போலீஸ் அதிகாரிகள் பலரும் அமர்ந்திருக்க 'ஹரே ராம ஹரே கிருஷ்ண' கீர்த்தனையை ஒருவர் பாட.. மற்ற நான்கு பேர் தாளம் போட பஜனை பாடப்படுகிறது. போலீசாரோ அமர்ந்திருந்து கைகள் தட்டியவாறு ரசிக்கின்றனர்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது தங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ பழைய வீடியோவா அல்லது அதன் உண்மை என்ன? என்பது தெரியப்படுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அரியானா காவல்துறையோ இந்த வீடியோ குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.


    Next Story
    ×