என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உத்தவ் தாக்கரே எத்தனை முறை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு வந்தார்?: அதிருப்தி எம்.எல்.ஏ. கேள்வி
- மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல அமைதி தேவை.
- இப்போது தான் உத்தவ் தாக்கரே பொதுவெளியில் தோன்றுவது அதிகரித்து உள்ளது.
மும்பை :
சிவசேனா பிளவுபட்டுள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கும், ஷிண்டே தலைமையிலான அணிக்கும் வார்த்தை போர் வலுத்துள்ளது.
குறிப்பாக ஆதித்ய தாக்கரே கட்சியை மீண்டும் வலுப்படுத்த நடத்தி வரும் பேரணியில் அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை கடுமையாக சாடி வருகிறார்.
இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியின் செய்தி தொடர்பாளரான தீபக் கேசர்கர் எம்.எல்.ஏ. தெற்கு மும்பையில் வார்டு அளவிலான சிவசேனா அலுவலகத்தை திறந்து வைத்து ஊழியர்களிடம் பேசியதாவது:-
நாங்கள் முக்கியமான 3 கேள்விகளை எழுப்பி உள்ளோம். அந்த கேள்விகளுக்கு இன்னும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அதில் ஒன்று முதல்-மந்திரியாக இருந்த உத்தவ் தாக்கரே எத்தனை முறை மந்திராலயாவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிவசேனா உறுப்பினர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கினாரா?. இப்போது தான் அவர் பொதுவெளியில் தோன்றுவது அதிகரித்து உள்ளது.
மகாராஷ்டிராவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல அமைதி தேவை. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியில் உள்ள தலைவர்களுக்கு எதிரான பேரணிகளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
கடந்த 2½ ஆண்டுகளில் மகா விகாஸ் அகாடி அரசு மத்திய அரசை விமர்சிப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளது. மத்திய அரசுடன் நல்லுறவை வைத்துக்கொள்ளாவிட்டால், எப்படி வளர்ச்சி அடைய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.