search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    78-வது சுதந்திர தினம்: நாட்டு வளர்ச்சிக்கான மாற்றங்கள் கொண்டுவரப்படும் - பிரதமர் மோடி

    • இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதில் இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும்.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


    Live Updates

    • 15 Aug 2024 2:24 AM GMT

      தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில், நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது - பிரதமர் மோடி

    • 15 Aug 2024 2:19 AM GMT

      நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் - பிரதமர் மோடி

    • 15 Aug 2024 2:17 AM GMT

      40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக முடியும் - பிரதமர் மோடி

    • 15 Aug 2024 2:16 AM GMT

      நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்நேரத்தில் போற்றுகிறேன் - பிரதமர் மோடி

    • 15 Aug 2024 2:12 AM GMT



    • 15 Aug 2024 2:07 AM GMT

      தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

    • 15 Aug 2024 2:05 AM GMT

      11வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றினார் பிரதமர் மோடி. தேசிய கோடி மீது ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவி மரியாதையை செலுத்தப்பட்டது.

    • 15 Aug 2024 2:02 AM GMT

      டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

    Next Story
    ×