search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பலிகடாவை தேடுவார்கள்: இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு
    X

    ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பலிகடாவை தேடுவார்கள்: இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு

    • மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன.
    • ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    பிரதமர் மோடி இன்று உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கார்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

    மோடிக்கு எதிராக "வாக்கு ஜிகாத்" என்ற கோரிக்கையை சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் முன்வைக்கின்றன. மக்களவை தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும். ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு இந்தியா கூட்டணி உடைந்துவிடும். தோல்விக்கு பிறகு பலிகடாவை தேடுவார்கள்.

    அமேதியில் (ராகுல் காந்தி கடந்த வருடம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கூறினார்) இருந்து காங்கிரஸ் சென்று விட்டது. ரேபரேலியில் (தற்போது ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுகிறார்) இருந்தும் செல்வார்கள். ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்களை உருவாக்க வேண்டும் என்பது இந்திய கூட்டணியின் ஆட்சியை நடத்துவதற்கான பார்முலா.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக பதோஹியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட்டை பாதுகாப்பதே கடினம்தான். ஆகவே, அவர்கள் பதோஹியில் பரிசோதனை அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் என்பது இந்துக்கள் கொலை, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான துன்புறுத்தல், பெண்கள் மீதான வன்கொடுமை. அங்கு பல பாஜக தலைவர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்துக்களை கங்கை நதியில் மூழ்கடித்து கொன்று விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறுகிறார்.

    மேற்கு வங்காளத்தில் இந்த வகையிலான அரசியலைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் செய்கிறது. சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் திரிணாமுல் அரசியலை முயற்சிக்க விரும்பின. அது அரசியல் திருப்திபடுத்துதல், தலித்துகள் மற்றும் பெண்களை துன்புறுத்தும் அரசியலாகும்" என்றார்.

    Next Story
    ×