search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அநீதிக்கு எதிரான போரில் உங்களுடன் உள்ளோம்: கெஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
    X

    அநீதிக்கு எதிரான போரில் உங்களுடன் உள்ளோம்: கெஜ்ரிவாலுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து

    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிறந்தநாளை கொண்டாடினார்.
    • கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியினர் உள்பட பலவேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன். அநீதிக்கு எதிரான இந்தப் போரில் இந்தியா உங்களுடன் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    கெஜ்ரிவாலுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள தமிழக முதலமைச்சர் உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×