என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பெண் ஐ.டி. ஊழியர் சுட்டுக்கொலை: காதலன் வெறிச்செயல்
- சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ரிஷப் நிகம் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
- பட்டாசு சத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்ட சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மும்பை:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி (வயது26). இவர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
புனே ஹின்ஜேவாடி பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு வந்தனா திவேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை படுகொலை செய்ததாக அவரது காதலன் ரிஷம் நிகமை(30) போலீசார் நவிமும்பையில் கைது செய்தனர். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ரிஷப் நிகம் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதன் மூலம் அவர் தான் கொலையாளி என்று கருதிய போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொலை நடந்த இரவு ஹின்ஜேவாடி பகுதியில் மராத்தா சமூக இடஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்து உள்ளது. அப்போது அதிகளவு பட்டாசு வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் ரிஷப் நிகம், வந்தனா திவேதியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். அவரது தலை, கழுத்து பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளார். பட்டாசு சத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்ட சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் பெண் ஐ.டி. ஊழியர் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வந்தனாவும், ரிஷப்பும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கத்தில் இருந்து உள்ளனர். 2 பேரும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். வேலை காரணமாக வந்தனா புனேக்கு வந்து உள்ளார். அதன் பிறகு 2 பேரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. வந்தனா தன்னை விட்டுவிலகி செல்வதாக ரிஷப் நினைத்து இருக்கிறார். மேலும் சமீபத்தில் 2 முறை அவரை சிலர் தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில் வந்தனா இருப்பதாக அவர் நினைத்து இருக்கிறார். வந்தனா தன்னைவிட்டு வேறு நபருடன் செல்ல போவதாகவும் அவர் சந்தேகப்பட்டு உள்ளார். இதன் காரணமாக தான் கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்