என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அமர்நாத் யாத்திரை தொடக்கம்... முதல் குழுவில் 2000-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள்
- இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பனி உறைந்து சிவலிங்க வடிவத்தில் காட்சி தரும். இயற்கையாக உருவாகும் இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு 62 நாட்கள் நடைபெற்ற புனித யாத்திரையில் 4.5 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நாளை தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதுமிருந்து ஏராளமான சாதுக்கள் ஜம்முவில் குவிய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்களின் முதல் குழு இன்று காலை ஜம்முவில் இருந்து புறப்பட்டது. ஜம்முவின் பகவதி நகரில் உள்ள யாத்ரி நிவாஸில் இருந்து இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் குழு புறப்பட்டது. முன்னதாக, பூஜை முடிந்ததும் கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியை அசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.
யாத்ரீகர்கள் அனைவரும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் மற்றும் பால்டால் முகாம்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் புறப்பட்டனர். முதல் குழுவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.