search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஜாக்பாட் ... பட்ஜெட்டில்  அறிவிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முதல் முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஜாக்பாட் ... பட்ஜெட்டில் அறிவிப்பு

    • இந்த திட்டத்தின்மூலம் புதிதாக வேலையில் சேரும் 210 லட்சம் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும்
    • உற்பத்தித்துறை சார்ந்த தொழில்களில் உள்ள பணியிடங்களை அதிகரிக்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

    நாட்டில் உள்ள அனைத்து தொழில்துறைகளிலும் ரூ.1 லட்சத்துக்குள் உள்ள சம்பளம் கொண்ட வேலையில் சேரும் முதல் முறை ஊழியர்களுக்கு அவர்களின் ஒரு மாத சம்பளம் வருங்கால வைப்பு நிதியில் 3 தவணையாக அரசு செலுத்தும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின்மூலம் முதல் முறையாக வேலையில் சேரும் 210 லட்சம் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

    நடந்து முடித்த மக்களவைத் தேர்தலில் இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சனை பாஜகவின் வாக்கு வங்கியை சிதறடித்த நிலையில் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு முக்கிய நகர்வாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் மேற்கூறியதைத் தவிர்த்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும்நோக்கில் மேலும் 2 முக்கிய அறிவிப்புகள் கவனிக்கத்தக்கது.

    உற்பத்தித்துறை சார்ந்த தொழில்களில் உள்ள பணியிடங்களை அதிகரிக்கும் திட்டம் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் வரையறுக்கப்பட்ட ஊக்கத்தொகையானது அவர்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 4 வருட காலத்துக்கு தொடர்ந்து செலுத்தப்படும். இதனால் புதிதாக வேலையில் சேரும் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவர் என்று நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி, நிறுவனங்கள் ஒவ்வொரு முறையில் கூடுதலாக ஒரு ஊழியருக்கு வைப்பு நிதி செலுத்தும்போதும் , அந்நிறுவனங்களுக்கு ரூ.3000 வரையிலான தொகையை அரசு திருப்பி செலுத்தும். இந்த திட்டமானது, நிறுவனங்கள் அதிக பணியிடங்களை உருவாக்க வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×