என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை முதற்கட்ட தேர்தல்: காலை 9 மணி வரை 13 சதவீதம் வாக்குகள் பதிவு
- 609 பேர் ஆண்கள். 73 பேர் பெண்கள், 3 பேர் மாற்று பாலினத்தினர் என 683 வேட்பாளர்கள் போட்டி.
- 1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 15,344 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி வரை 43 சட்டமன்ற தொகுதிகளில் 13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்தேகா தொகுதியில் அதிகபட்சமாக 15.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஞ்சியில் 12.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சேரைகேலா-கர்சவான் தொகுதியில் 14.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ராஞ்சியில் உள்ள ஏடிஐ வாக்கு மையத்தில் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் வாக்களித்தார்.
43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா கோரா ஆகியோர் களத்தில் உள்ளனர். 683 வேட்பாளர்களில் 609 பேர் ஆண்கள். 73 பேர் பெண்கள், 3 பேர் மாற்று பாலினத்தினர்.
43 தொகுகளில் 17 பொதுத்தொகுதியாகும். 20 பழங்குடியினர் தொகுதியாகும். 6 எஸ்.சி. தொகுதியாகும்.
1.37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 15,344 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
43 தொகுதிகளில் 1.37 கோடி வாக்காகளர்கள் வாக்களிக்க உள்ளனர்.