search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்காத மத்திய அரசு: பினராயி விஜயன் சாடல்
    X

    90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்காத மத்திய அரசு: பினராயி விஜயன் சாடல்

    • மற்ற மாநிலங்கள் இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும்போது கேட்பதற்கு முன்னதாகவே நிதி.
    • கேரளாவுக்கு கேட்டும் இல்லை. மத்திய அரசின் இந்த புறக்கணிப்பு வேண்டுமென்றே மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒன்றிரண்டு கிராமங்கள் முற்றிலுமாக உருக்குலைந்தன.

    அந்த கிராமங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைக்க, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் மோடியும் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வைிட்டு மத்திய அரசு போதுமான உதவிகளை செய்யும் என உறுதியளித்திருந்தார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் உருவான 68-வது தினம் கேரளப்பிரவி (Keralappiravi) என்ற பெயரில் கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடைபெற்று 90 நாட்கள் ஆகியும் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு மத்திய அரசு சிங்கிள் பைசா கூட ஒதுக்காதது கொரூரமான புறக்கணிப்புக்கு ஆதாரம்.

    மற்ற மாநிலங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, அந்த மாநிலங்கள் கேட்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அனால் கேரளா உதவி கேட்டபோதிலும் ஒதுக்கப்படுவதில்லை. எனவே, மத்திய அரசின் இந்த புறக்கணிப்பு வேண்டுமென்றே மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

    கேரள மாநில உயர்நீதி மன்றமும், மாநில சட்டமன்றமும், மத்திய அரசுக்கு 1202 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்திய போதிலும், மத்திய அரசு தர தயாராக இல்லை.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (எதிர்க்கட்சி) ஆகியவை மாநிலத்தில் முன்னேற்றம் மீது அக்கறை காட்டவில்லை.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×