என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வரி ஏழைகளுக்கு, மானியம் பணக்காரர்களுக்கு... என்னையா நிர்மலா சீதாராமன் கொள்கை?: கேரளா காங்கிரஸ்
- சொகுசு எலெக்ட்ரிக் காருக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி.
- இரு சக்கர வாகனங்கள் கூட 28 சதவீத வரியை எதிர்கொள்கின்றன.
கோவை கொடிசியாவில் கடந்த 11-ந்தேதி தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.
அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லை.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கேள்வி கேட்டவரை அழைத்து வந்து வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த செய்தி இந்தியா அளவில் தீயாக பரவி தேசிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் ஒரு படத்தை வெளியிட்டு என்னையா நிர்மலா சீதாராமன் கொள்கை? என கேள்வி கேட்பதுபொல் எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் அதனுடைய எக்ஸ் பக்க பதிவில் "க்ரீம் உடன் கூடிய பன்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி எனும்போது, சுமார் 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான அல்ட்ரா- சொகுசு மெர்சிடெஸ் எலெக்ட்ரிக் காருக்கு நிர்மலா சீதாராமனின் கொள்கையின் கீழ் வெறும் 5 சதவீதம்தான் ஜிஎஸ்டி.
ஒவ்வொரு நாளும் பெட்ரோல் கார்களுக்கு செஸ் வரியுடன் 29 சதவீதம் முதல் 50 சதவீதம் ஜிஎஸ்டி என விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அடிப்படையிலான இரு சக்கர வாகனங்கள் கூட 28 சதவீத வரியை எதிர்கொள்கின்றன. வரி ஏழைகளுக்கு, மானியம் பணக்காரர்களுக்கு" எனக் குறிப்பிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்