என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேரளாவில் சோக சம்பவம்: 2 மகன்களை கொன்று தம்பதி தற்கொலை
- நிஜோவின் மனைவி சில்பா வேலைக்காக இத்தாலி சென்று இருந்தார்.
- மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நிஜோவும், சில்பாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடமக்குடி பகுதியை சேர்ந்தவர் நிஜோ (வயது 39), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சில்பா (29). இவர்களுக்கு ஏய்பன் (7), ஆரோன் (5) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். தரைதளத்தில் நிஜோவின் தம்பியின் குடும்பம் மற்றும் தாயார் ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உறங்க சென்ற நிஜோ மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் நிஜோவின் தாயார் ஆனி அவர்களை பார்க்க சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் எந்த பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, நிஜோவும், சில்பாவும் படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.
பேரன்கள் இருவரும் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தனர்.
இதை கண்டு ஆனி அதிர்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று நிஜோ, சில்பா உள்ளிட்ட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரவூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிஜோவின் மனைவி சில்பா வேலைக்காக இத்தாலி சென்று இருந்தார். அங்கு சரியான வேலை மற்றும் சம்பளம் கிடைக்காததால் அண்மையில் மீண்டும் கேரளாவுக்கு திரும்பினார். இதைதொடர்ந்து கடன் தொல்லை அதிகமானது. இதன் காரணமாக தான் மகன்கள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு நிஜோவும், சில்பாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.