search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முகமது அனாஸ், முகமது அஜ்மல்
    X

    ஒலிம்பிக்கில் பங்கேற்கும் கேரள வீரர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கிய மாநில அரசு

    • கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
    • அவர்களின் பயிற்சி மற்றும் மற்ற ஏற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என மந்திரி தெரிவித்துள்ளார்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டி இன்று தொடக்க விழாவுடன் தொடங்குகிறது. இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், சீனியர் தடகள பயிற்சியாளர் ராதாகிருஷ்ணன் நாயருக்கும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.

    முகமது அனாஸ், முகமது அஜ்மல் (இருவரும் ரிலே அணியில் உள்ளனர்), அப்துல்லா அபுபக்கர் (டிரிபிள் ஜம்ப்), பி.ஆர். ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), ஹெச்.எஸ் பிரனோய் (பேட்மிண்டன்) ஆகியோருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிதி வீரர்களின் பயற்சி மற்றும் ஒலிம்பிக் தொடர்பான ஏற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த முறையில் ஹாக்கி அணி பதக்கம் வெல்லும என நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். பிரனோய் நல்ல ஃபார்மில் உள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×