search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவு துக்கத்தில் இருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது- கேரள முதல்வர்
    X

    வயநாடு நிலச்சரிவு துக்கத்தில் இருந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது- கேரள முதல்வர்

    • தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு முதல்வர் பினராஜி விஜயன் உரையாற்றினார்.
    • மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக நாம் வாழ வேண்டும், முன்னேற வேண்டும்.

    வயநாடு நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தால் நாட்டில் உள்ள அனைவரும் சோகமாக இருக்கும் நிலையில், மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக வாழ்ந்து முன்னேற வேண்டிய நேரம் இது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

    நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு முதல்வர் பினராஜி விஜயன் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறுகையில், "1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினாலும், நாட்டில் அறிவியல் விழிப்புணர்வு பாதிக்கப்பட்டு வருகிறது. மூடநம்பிக்கைகள், தீங்கான பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் மீண்டும் நுழைந்தன.

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, பேரழிவைத் தொடர்ந்து துக்கத்தில் இருக்கும் நேரத்தில் கேரளாவும், நாடும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

    ஆனால், சோகமாக இருக்க முடியாது. மாநிலத்தின் உயிர்வாழ்விற்காக நாம் வாழ வேண்டும், முன்னேற வேண்டும். எனவே, இந்த ஆண்டு சுதந்திர தினம், மாநிலத்தின் உயிர்வாழ்வை உறுதி செய்யும் கூட்டு நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.க்ஷ

    விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேறிய போதிலும், நாடு இன்னும் இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணித்து, அதன் மூலம் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க முடியவில்லை.

    இது தீவிரமான சிந்தனைக்கு தகுதியான ஒன்று. இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள துல்லியமான கணிப்புகள் தேவை. உலகின் பிற பகுதிகளில் உள்ள அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொண்டது இதுதான்.

    தேசம் அந்த நிலையை அடைய மத்திய அரசு முறையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களின் சமமான வளர்ச்சியால் மட்டுமே நாட்டின் எழுச்சியை உறுதி செய்ய முடியும் என்றும்.

    சாதி மற்றும் மதத்தை ஆயுதங்களாகப் பயன்படுத்தி சில சக்திகள், நாம் கடந்து வந்த இருளை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.

    இது நமது மதச்சார்பின்மையை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இதை எவ்வாறு திறம்பட எதிர்கொள்வது என்பதை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.

    நாடு சுதந்திரம் அடைந்து எட்டு தசாப்தங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்திற்காக நாம் போராடிய போது நமது கனவுகள் என்ன என்பதை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணமாக இது அமைய வேண்டும்.

    கேரள மாநிலம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவதாகவும், மற்ற மாநிலங்களை விட முன்னணியில் இருக்கிறது.

    நாட்டிலேயே மிகக் குறைந்த குழந்தை மற்றும் தாய்மார்களின் இறப்பு விகிதங்களைக் கொண்ட கேரளா. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டில் முதலிடம் வகிக்கிறது. நாட்டிலேயே PSC-ன் கீழ் அதிக நியமனங்களைச் செய்கிறது.

    கேரளாவை புதிய மற்றும் மேம்பட்ட மாநிலமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×