search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நேற்று ராகுல், இன்று நான்: பிரதமருக்காக கழிவறையை கூட... கொந்தளித்த கார்கே
    X

    நேற்று ராகுல், இன்று நான்: பிரதமருக்காக கழிவறையை கூட... கொந்தளித்த கார்கே

    • பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், அவர் இருந்த பகுதியில் வான்பகுதியை பயன்படுத்ததடை.
    • ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்க்கண்டில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி இருக்கும் வான்பகுதிகளில் பறக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

    இன்று அமித் ஷாவிற்காக நான் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்திள்ளார்.

    இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    நேற்று பிரதமர் மோடி அவருடைய விமானத்தில் இருந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் வேண்டுமேன்றே இரண்டு மணி நேரம் காக்க வைப்பட்டது. இன்று அமித் ஷா ஜார்க்கண்ட் வந்திறங்கியதால் என்னுடைய ஹெலிகாப்டர் இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது. அவர் செல்லக்கூடிய வழி வேறு. நான் செல்லக்கூடிய வழி வேறு.

    ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். கேபினட் மந்திரிகளுக்கு இணையான ரேங்க் கொண்டவர். நானும் அதேபோல்தான். ஆனால் விமான நிலையத்தின் ஒதுக்கப்பட்ட ஓய்வறை பிரதமர் மோடிக்காக என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடிக்காக கழிவறையை கூட ஒதுக்க முடியுமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு மல்லியார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×