search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    7 வயதில் கடத்தல்.. 24 வயதில் வக்கீலாக வந்து நின்ற இளைஞர்.. சிம்பு பட பாணியில் ஸ்வீட் ரிவெஞ்ச் - பின்னணி
    X

    7 வயதில் கடத்தல்.. 24 வயதில் வக்கீலாக வந்து நின்ற இளைஞர்.. சிம்பு பட பாணியில் ஸ்வீட் ரிவெஞ்ச் - பின்னணி

    • போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.
    • தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டார்

    பிப்ரவரி 10, 2007 :

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேர்கர் [Kheragarh] நகரில் ஹர்ஸ் ராஜ் என்ற 7 வயது சிறுவன் தந்தை மற்றும் உறவினர் முன்னிலையிலேயே துப்பாக்கி முனையில் கொள்ளையர்களால் காரில் கடத்திச் செல்லப்படுகிறான். ஆக்ராவில் இருந்து சம்பல் பகுதிக்கு சிறுவனை கடத்திச் சென்ற கொள்ளயர்கள் அவனது பெற்றோர்களிடம் ரூ.55 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் தேடி வந்ததால் சிறுவை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்கு கொள்ளையர்கள் இடம்மாற்றியுள்ளனர்.

    சுமார் ஒரு மாத காலத்துக்குள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என சிறுவனை அழைத்துக்கொண்டு கொள்ளையர்கள் சுற்றியுள்ளனர். கடைசியாக மே 2007 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் துப்பு துலக்கி கண்டறிந்து சிறுவனை மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய 14 பேரை அதற்கடுத்த ஒரு வருடத்துக்குள்ளாகவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர்கள் மீது கடந்த 14 வருடமாக வழக்கு நடந்து வந்துள்ளது.

    செப்டம்பர் 17, 2024 :

    கடத்தப்பட்ட அந்த சிறுவன் ஹர்ஸ் ராஜ் தற்போது 24 வயது இளைஞன். அதுமட்டுமின்றி பட்டம் பெற்ற வழக்கறிஞர். தனது கடத்தல் வழக்கில் இறுதி விசாரணையில் நீதிமன்றத்தில் தன் சார்பாக ஆஜரான ஹர்ஸ் ராஜ் இறுதி வாதத்தை முன்வைத்துள்ளார். நீதிபதியின் அனுமதி பெற்று சரியாக 55 நிமிடங்களில் தனது இறுதி வாதத்தை ஹன்ராஜ் சொல்லி முடித்துள்ளார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

    14 பேரில் இருவர் வழக்கு நடக்கும்போதே இடையில் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் தகுந்த ஆதரங்கில்லாமல் விடுவிக்கப்பட்டிருந்தனர். கடந்த 2015 முதல் தனது கடத்தல் வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தில் சென்று பார்த்து வந்த ஹர்ஸ் ராஜ் அதனால் கவரப்பட்டுக் கடந்த 2022 இல் ஆக்ரா சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று தனது கடத்தல் வழக்கை வாதாடி வந்த அரசாங்க வக்கீலுக்கு உதவியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×