என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தெலுங்கானா பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமனம்- மந்திரி சபையில் மாற்றம் வருமா?
- ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக இப்போது இருந்தே தேசிய கட்சிகள் பரபரப்பாய் இயங்கி வருகின்றன.
குறிப்பாக ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதே வேலையில் பா.ஜ.க.வும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை முறியடித்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறது.
இந்த ஆண்டு சில மாநிலங்களில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களையும், அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலையும் கருத்தில் கொண்டு பா.ஜ.க. தலைமை பல அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
அதன்படி, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் புதிய மாநில தலைவர்களை நியமித்து பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டது.
அந்த வகையில், மத்திய சுற்றுலாத்துறை மந்திரியான கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவராக சுனில் ஜஹரும், ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. தலைவராக பாபுலால் மரன்டியும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். முன்னாள் மத்திய மந்திரியான புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் தேர்தல் நிர்வாகக் குழுத் தலைவராக முன்னாள் மந்திரி எடேலா ராஜேந்தரை கட்சி தலைமை நியமித்துள்ளது.
மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதால், அவர் வகித்த துறைக்கு வேறு மந்திரி நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், மத்திய மந்திரி சபையிலும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அர்ஜுன்ராம் மேக்வால், பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜு, எஸ்.பி.எஸ்.பாகல் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை. அதேவேளையில், இந்த சந்திப்புகளுக்கும், மத்திய மந்திரிசபை மாற்றம் குறித்த பேச்சுக்கும் தொடர்பில்லை. கட்சி நிகழ்வுகள் தொடர்பாக வழக்கமாக நடக்கும் கலந்துரையாடல்கள்தான் இவை என்று பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்