search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    லட்டு விவகாரம்.. பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்..!
    X

    லட்டு விவகாரம்.. பவன் கல்யாணுக்கு நீதிமன்றம் சம்மன்..!

    • இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசினார்.
    • ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    திருப்பதி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்யப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசினார் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இது தொடர்பாக ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி துணை முதல்வர் பவன் கல்யாண் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×