search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஹத்ராஸில் ராகுல் காந்தி... பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

    • காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். மதபோதகர் போலே பாபா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி முன்னே சென்றனர்.

    இதில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே, ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த சேகவர்கள் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்திக்க இன்று அதிகாலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.சுமார் 7.30மணி அளவில் ஹத்ராஸை வந்தடைந்த ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.



    Next Story
    ×