என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் ஜெகதீப் தன்கருக்கு தலைவர்கள் வாழ்த்து
- பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்று ஜனாதிபதி ட்வீட்
புதுடெல்லி:
நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற தேர்தலில் அவர் 528 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா, 182 வாக்குகளே பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள ஜெகதீப் தன்கருக்கு, பதவியை நிறைவு செய்ய உள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'ஜெகதீப் தன்கரின் நீண்டகால பொது வாழ்வின் அனுபவத்தால் நாடு பயனடையும் என்றும் அவரது ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு ட்வீட் செய்துள்ளார்.