search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள திரைத்துறையை போல காங்கிரஸ் கட்சியிலும்.. கருத்து சொன்ன பெண் தலைவர் அதிரடி நீக்கம்
    X

    'கேரள திரைத்துறையை போல காங்கிரஸ் கட்சியிலும்..' கருத்து சொன்ன பெண் தலைவர் அதிரடி நீக்கம்

    • சிமி இந்த கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • தலைவர் VD சதீசன் உட்பட ஆண் நிர்வாகிகளுக்கு ஏற்ற விதமாக நடந்த்து கொண்டால் மட்டும்தான் பெண்களுக்கு பதவி கிடைக்கிறது

    கேரள திரைத்துறையில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேரள காங்கிரசிலும் "காஸ்டிங் கவுச்"[casting couch] எனப்படும் படுக்கைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை இருந்து வருவதாகக் கட்சியின் பெண் THALIAVR சிமி ரோஸெபெல் ஜான் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிமி இந்த கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    எர்ணாகுளத்தில் வைத்து செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கேரள காங்கிரசில் பெண் உறுப்பினர்கள் உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என்றால் கட்சிக்குள் தங்களிடம் நடக்கும் அத்துமீறல்களைப் போர்த்துக்கொண்டிருந்தாக வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். மேலும் கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் VD சதீசன் உட்பட ஆண் நிர்வாகிகளுக்கு ஏற்ற விதமாக நடந்த்து கொண்டால் மட்டும்தான் பெண்களுக்கு பதவி கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரசில் உள்ள பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சிமி பேசியுள்ளதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குதவதாக கேரள காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் காங்கிரசில் உள்ள லட்சக்கணக்கான பெண்களை மன ரீதியாக பாதிப்பதாகவும், அவர்களின் கண்ணியத்தை குலைப்பதாகவும் சிமி பேசியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும் சிமியின் குற்றச்சாட்டுகளைக் கேரளா காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் VD சதீசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நாங்கள் அவரையும்[சிமி] ஆதரிக்கவே செய்தோம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் கூட பல்வேறு பொறுப்புகளில் சிமி இருந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×