search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்
    X

    சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்

    • 'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
    • நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.

    'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.

    இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




    Live Updates

    • 23 Aug 2023 5:55 PM IST

      புது கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த உத்தரவுகளும் கொடுக்கப்படவில்லை. சின்ன, சின்ன இடையூறுகளை அதுவாகவே சரி செய்து கொள்ளும்.

    • 23 Aug 2023 5:53 PM IST

      நிலவில் இருந்து தரையின் தூரம் சீராக குறைக்கப்பட்டு வருகிறது.

    • 23 Aug 2023 5:53 PM IST

      தானியங்கி முறையில் தரையிறங்க உத்தரவு கொடுக்கப்பட்ட பின், அனைத்தும் முறையாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    • 23 Aug 2023 5:52 PM IST

      லேண்டரின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இயங்கி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • 23 Aug 2023 5:50 PM IST

      லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு வருகிறது, சமிக்ஞைகள் சரியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • 23 Aug 2023 5:47 PM IST

      லேண்டரின் ஏஐ சிஸ்டத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏஎல்எஸ் செயல்பாடு துவங்கியது.

    • 23 Aug 2023 5:47 PM IST

      8 கட்டங்களாக சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறக்கப்படுகிறது.


    • 23 Aug 2023 5:44 PM IST

      சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கும் பணி சரியா 5.44 மணிக்கு துவங்கியது.

    • 23 Aug 2023 5:36 PM IST

      இஸ்ரோ மையத்தில் இருந்து சந்திரயான் 3 லேண்டரை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 23 Aug 2023 4:42 PM IST

      நிலவின் மேற்பரப்பில் ரோவர் தரை இறங்கி ஊர்ந்து செல்லும்போது நிலவின் மணல் பகுதியில் அசோக சின்னமும், இஸ்ரோவின் லோகோவும் பதிவு செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×