search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

    • வயநாட்டில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Live Updates

    • 30 July 2024 9:13 PM IST

      வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் கர்நாடக மாநில அரசு அளித்து வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • 30 July 2024 8:10 PM IST

      2018-ல் வெள்ளம் மாநிலத்தை நாசப்படுத்தியதைப் போலவே, அழிக்கப்பட்ட வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் மீண்டும் கட்டியெழுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 30 July 2024 8:03 PM IST

      சாலி ஆற்றில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கயிறு கட்டி ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து உடல்கள் கரைக்கு கொண்டு வரப்படுகின்றன. இரவு ஆன போதிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

    • 30 July 2024 7:58 PM IST

      உயிரிழந்தவர்களில் 55 பேர் உடல் பரிசோதனை முடிவடைந்துள்ளது. இந்திய கடற்படையின் பேரிடர் மீட்புக்குழு வயநாடடிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    • 30 July 2024 6:26 PM IST

      முண்டகை பகுதியில் இருந்து காயம் அடைந்த மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்

    • 30 July 2024 6:25 PM IST

      வயநாடு நிலச்சரிவின் மையப்பகுதியில் 48 மணி நேரத்தில் 572 மிமீ மழை பெய்துள்ளது.

    • 30 July 2024 5:49 PM IST

      இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு. மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

      இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

    • 30 July 2024 4:40 PM IST

      மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை வயநாடு சென்று பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிடுகிறார்கள்.

    • 30 July 2024 4:34 PM IST

      முண்டகை பகுதியில் சிக்கியுள்ள 100-க்கும் மேற்பட்டோரை கண்டுபிடித்துள்ளது மீட்புக்குழு

    Next Story
    ×