search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு

    • வயநாட்டில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

    இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Live Updates

    • 30 July 2024 5:47 AM GMT

      வயநாடு நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. துயரில் சிக்கி தவிக்கும் குடும்பத்தார் விரைந்து மீண்டுவர வேண்டுகிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 30 July 2024 5:21 AM GMT

      வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் காரணமாக பலர் உயிரிழந்தது குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • 30 July 2024 5:19 AM GMT

      வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் வேதனையளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


    • 30 July 2024 5:08 AM GMT

      வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரிப்பு... 70 பேர் காயமடைந்துள்ளனர்.

    • 30 July 2024 5:08 AM GMT

      கேரளா, வயநாட்டில் காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக பாலம் அமைத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மக்களை மீட்டு வருகின்றனர்.

    • 30 July 2024 5:07 AM GMT

      கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வடக்கஞ்சேரி அருகே வெள்ளத்தில் மூழ்கிய ரெயில் தண்டவாளம்...

    • 30 July 2024 5:06 AM GMT

      "வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்புகள் குறித்த செய்தி கவலை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்றோர் விரைந்து குணமடையவும், மீட்பு பணிகள் வெற்றி பெற வேண்டுகிறேன்," என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

    Next Story
    ×