என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பணப்பட்டுவாடா புகார்.. ரூ.10 லட்சம் பறிமுதல் - பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு
- வினோத் தாவ்டே மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஓட்டலில் பணப்பட்டுவாடா செய்தபோது பிடிபட்டுள்ளார்.
- வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரசின் மகா விகாஸ் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே பண பட்டுவாடா செய்ததாக காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி ஆதரவாளர்கள் வினோத் தாவ்டே முன்பு ரூபாய் நோட்டுகளை காட்டி வாக்குவாதம் செய்கின்றனர்.
BJP के राष्ट्रीय महासचिव विनोद तावड़े महाराष्ट्र के एक होटल में पैसे बांटते हुए पकड़े गए हैं।विनोद तावड़े बैग में भरकर पैसे लेकर गए थे और वहां पर लोगों को बुला-बुलाकर पैसे बांट रहे थे।ये खबर जब जनता को पता चली तो भारी हंगामा हो गया। पैसों के साथ विनोद तावड़े के कई वीडियो… pic.twitter.com/iqbMcGJtyQ
— Congress (@INCIndia) November 19, 2024
காங்கிரஸ் அந்த பதிவில், "பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஓட்டலில் பணப்பட்டுவாடா செய்தபோது பிடிபட்டுள்ளார். வினோத் தாவ்டே பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு சென்று அங்குள்ளவர்களிடம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்.
இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். வினோத் தாவ்டே பணத்துடன் இருக்கும் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. மகாராஷ்டிராவில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் பணத்தின் மூலம் தேர்தலில் வெற்றிபெற முயல்கின்றனர்.இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது.
வினோத் தாவ்டே ஓட்டல் அறைகளில் இருந்து 9.93 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாருக்கெல்லாம் பணத்தை பிரித்து தர வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டைரியும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, வினோத் தாவ்டே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே மறுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்