search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முதல் மந்திரி பதவி: அமித்ஷாவுடன் பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் சந்திப்பு
    X

    முதல் மந்திரி பதவி: அமித்ஷாவுடன் பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் சந்திப்பு

    • ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி ரேசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • என்னை ஒரு தடையாக கருதவேண்டாம் என பிரதமர், அமித்ஷாவிடம் கூறினேன் என்றார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஆளும் மாகயுதி [பாஜக 132, ஷிண்டே சேனா 57, அஜித் பவார் என்சிபி 41, இதர கூட்டணி கட்சிகள் 5] 235 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

    மகாராஷ்டிர சட்டசபையின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் காலாவதி ஆனது. இதனால் ஏக்நாத் ஷிண்டே ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனைச் சந்தித்து முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதம் வழங்கினார். அடுத்த அரசு அமையும் வரை அவர் பொறுப்பாளராக இருப்பார் என கூறப்பட்டது.

    அடுத்து யார் முதல் மந்திரி என்பதில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரி ரேசில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதுதொடர்பாக பேசிய ஏக்நாத் ஷிண்டே, என்.டி.ஏ. கூட்டணியின் தலைவரான பிரதமர் மோடி எந்த முடிவு எடுத்தாலும் அதை இறுதி முடிவாக நாங்கள் ஏற்போம். என்னை ஒரு தடையாக கருத வேண்டாம் என பிரதமர் மற்றும் அமித்ஷாவிடம் கூறினேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் ஒன்றாகச் சந்தித்தனர். அப்போது முதல் மந்திரியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது என தகவல்கள் வெளியாகின.

    Next Story
    ×