search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ம.பி.யில் பாலஸ்தீன கொடி ஏற்றியவர் கைது
    X

    ம.பி.யில் பாலஸ்தீன கொடி ஏற்றியவர் கைது

    • டெய்லர் கடையை மூவர்ண மலர் மற்றும் பலூன்களால் அலங்கரித்துள்ளார்.
    • தேசியக்கொடியுடன் பாலஸ்தீன கொடியையும் ஏற்றியதால் உள்ளூர் பாஜகவினர் புகார் அளித்தனர்.

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அரசு அலுவலகம், பள்ளிக் கூடங்கள், வீடுகளில் தேசியக் கொடியை அவமதிக்காத வகையில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள டெய்லர் கடைக்காரர் அவரது கடைக்கு முன் பாலஸ்தீன கொடியை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலீசார் புகார் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தேசிய மரியாதையை அவமதிப்பதை தடுக்கும் சட்டம் 1971 கீழ் தேசிய கொடியை அவமதித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை துணை கமிஷனர் ஜெயிலில் அடைத்துள்ளார்.

    ஹனீப் கான் (வயது 40) தனது கடையை காவி, வெள்ளை, பச்சை கலர் பலூன் மற்றும் மலர்களால் அலங்கரித்திருந்தார். ஆனால், தேசிக்கொடியுடன் பாலஸ்தீன கொடியையும் சேர்த்து ஏற்றிருந்தார். போலீசார் பாலஸ்தீன கொடியை அகற்றி அவரை கைது செய்தனர்.

    Next Story
    ×