search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கஜினி பட பாணியில் உடலில் எதிரிகள் பெயர்: டாட்டூவை வைத்து கொலையாளியை பிடித்த போலீசார்
    X

    கஜினி பட பாணியில் உடலில் எதிரிகள் பெயர்: டாட்டூவை வைத்து கொலையாளியை பிடித்த போலீசார்

    • கொலை செய்யப்பட்ட நபரின் உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார்.
    • அதில் இடம் பிடித்துள்ள ஒருவர் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

    மும்பையில் நீண்ட காலமாக குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலில் 22 பேரின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார். போலீசார் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், அவருக்கு திங்கு விளைவித்த எதிரிகளின் 22 பேரை பச்சை குத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆர்டிஐ ஆர்வலர் எனக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த குரு வாக்மார் (வயது 38) மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர் புதன்கிழமை அதிகாலை மத்திய மும்பையில் உள்ள வோர்லி என்ற இடத்தில் உள்ள ஸ்பாவில் (Spa) கொலை செய்யப்பட்டார்.

    அவரது உடலை பரிசோதனை செய்தபோது, அவரது தொடையில் 22 பேர் பெயரை பச்சைக்குத்தியது தெரியவந்துள்ளது. இந்த 22 நபர்களால் துன்புறுத்தப்பட்டிருந்ததால் தன்னுடைய உடலில் பச்சைக்குத்தி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் ஸ்பா உரிமையாளர் சந்தோஷ் ஷெரேகர் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். அதில் ஷெரேகர் பெயர் குரு வாக்மார் உடலில் பச்சைக் குத்தப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குரு வாக்மாரின் பணம் பறிப்பு தொடர்பாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபம் அடைந்து கொலை செய்ய ஷெரேகரை தூண்டியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். முகமது பெரோஷ் அன்சாரி (26) என்பவருக்கு குரு வாக்மாரை கொலை செய்வதற்காக 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.

    அன்சாரியும், ஷெரேகரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகம் ஆனவர்கள். அன்சாரி மும்பை அருகே நள சோபாரா என்ற இடத்தில் ஸ்பா நடத்தி வந்தவர். ரெய்டு காரணமாக கடந்த வரும் ஸ்பாவை மூடிவிட்டார். அதிகாரிகளுக்கு குரு வாக்மார் புகார் அளித்ததன் மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    அன்சாரி ஷெரேகரை அணுகி ஸ்பா உரிமையாளர்களிடம் இதுபோன்று வாக்மார் புகார் அளிப்பது மற்றும் மிரட்டி பணம் பறிப்பதை தடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது வாக்மாரை ஒழிக்க வேண்டும் என ஷெரேகர் தெரிவித்துள்ளார்.

    அதன்பின் அன்சாரி சகிப் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார். சகிப் அன்சாரி டெல்லியை சேர்ந்தவர்கள். அதன்பின் கொலை செய்ய சதி திட்டம் மூன்று மாதங்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.

    மூன்று மாதங்கள் குரு வாக்மாரின் நடமாட்டத்தை நோட்டமிட்ட அவர்கள், அதன்பின் ஷெரேகர் ஸ்பாவில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    சியோன் பகுதியில் உள்ள மதுபான பாருக்கு வெளியில் வாக்மார் தனது பிறந்த நாளை 21 வயது தோழியுடன் செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடியிருந்தபோது ரெயின்கோட் அணிந்த இருவர் அவரை பின்தொடர்ந்தனர். பின்னர் ஷெரேகர் ஸ்பா இருக்கும் இடம் வரை வாக்மோரை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தில் முகமது பெரோஸ் அன்சாரி ஈடுபட்டதை, அருகில் உள்ள கடையில் பொருள் வாங்கி UPI மூலம் பணம் செலுத்தியது, பின்னர் UPI ID-யில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரில் இருந்து ஷெரேகருக்கு போன் செய்தததில் இருந்து போலீசார் கண்டுபிடித்தனர்.

    பெரோஷ், சகிப் அன்சார் புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஸ்பாவிற்கு வந்து, வாக்மாரின் தொழியை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்ற பிறகு, வாக்மார் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் கழுத்தை பிளேடால் அறுக்க, மற்றொருவர் வயிற்றில் குத்தி கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை குறித்து வாக்மாரின் தோழி காலை 9 மணிக்கு தெரிந்து கொண்டு, ஷெரேகரிடம் கூற அவர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    மும்பை, நவி மும்பை, தானே, பல்கார் போன்ற பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் கடந்த 2010-ல் இருந்து மிரட்டி பணம் பறித்ததாக வாக்மார் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கற்பழிப்பு, பாலியல் தொல்லை கொடுத்தல் போன்று வழக்குகள் உள்ளன. அடையாளம் காணப்பட்ட 8 வழக்குகளும், சந்தேகத்தின் அடிப்படையிலான 22 வழக்குகளும் உள்ளன.

    Next Story
    ×