search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாஜ் ஓட்டலில் டீ குடித்து கனவை நினைவாக்கிய இளைஞர்- வீடியோ வைரல்
    X

    தாஜ் ஓட்டலில் டீ குடித்து கனவை நினைவாக்கிய இளைஞர்- வீடியோ வைரல்

    • டீயை குடித்த பதான் 10-க்கு 5 என்று மதிப்பிட்டுள்ளார்.
    • வீடியோ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    சாமானியர்கள் பலருக்கும் நட்சத்திர ஓட்டல்களை பார்க்கும் போது ஒரு பிரமிப்பு ஏற்படும். அங்கு சென்று ஒரு டீயாவது குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஆசைப்பட்ட சாமானிய இளைஞரான அட்னான் பதான் என்பவர் மும்பையின் சின்னமாக விளங்கும் 5 நட்சத்திர ஓட்டலான தாஜ்மஹால் பேலசுக்கு சென்று டீ குடித்துவிட்டு தனது கனவை நிறைவேற்றி உள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அதில், அட்னான் பதான் தாஜ்மஹால் பேலசுக்கு வெளியில் வீடியோ எடுப்பதில் இருந்து தொடங்குகிறது. பின்னர் உற்சாகமாக ஓட்டலுக்கு செல்லும் அவர், அங்கு அலங்கரிக்கப்பட்ட வளாகம் மற்றும் சுவரில் ஏராளமான பிரபலங்களின் புகைப்படங்கள் இருப்பதை காட்டுகிறார். தொடர்ந்து அவர், தாஜ் ஓட்டல் உள்ளே இருந்து பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது.

    'நான் ஒரு அரச அரண்மனையில் இருப்பதை போல் உணர்கிறேன்' என்று கூறுகிறார். அதன் பிறகு பதான், மெனுவை பார்த்து பாம்-கி டீ- ஐ ஆர்டர் செய்கிறார். ரூ.1,800 விலை கொண்ட அந்த டீ வரியுடன் சேர்த்து ரூ.2,124 ஆகும். அதனுடன் வடாபாவ், சாண்ட்விச், பட்டர் போன்ற பிற உணவுகளையும் சேர்த்து வழங்குகின்றனர். டீயை குடித்த பதான் 10-க்கு 5 என்று மதிப்பிட்டுள்ளார்.

    வீடியோவின் முடிவில் பதான் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதோடு, வாழ்க்கையில் ஒருமுறையாவது இது போன்ற அனுபவத்தை கண்டிப்பாக பெற வேண்டும் என கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. பயனர் ஒருவர், இந்த வீடியோ மிகவும் உற்சாகம் அளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், வெறும் டீக்கு ரூ.2,124? இது நிச்சயம் ஆடம்பரம் என்று பதிவிட்டிருந்தார்.



    Next Story
    ×