search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
    X

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

    • இன்று நடைபெறும் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
    • உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார்.

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டார்.

    நேற்று இரவு துபாய் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அந்நாட்டின் துணை பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    விமான நிலையத்தில் ஹோட்டலுக்கு செல்லும் வழியிலும், ஹோட்டலுக்கு வெளியேயும், பிரதமர் மோடிக்கு ஐக்கிய எமிரேட்ஸ் வாழும் இந்தியர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். மோடி மோடி, பாரத் மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம் என கோசமிட்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்திய தேசியக்கொடிகளை கையில் ஏந்தியும் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த கலாசார நிகழ்ச்சியை கண்டுகளித்தார்.

    உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கிறார்கள்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறுகையில், பிரதமர் மோடி உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் தனது உரையை ஆற்றுவார்.

    உரையைத் தவிர பிரதமர் 3 உயர்மட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார். அதில் இரு நிகழ்ச்சிகள் இந்தியாவால் இணைந்து நடத்தப்படுகிறது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து நடத்தும் முதல் உயர்மட்ட நிகழ்வு பசுமைமயமாக்கத்தின் தொடக்கமாகும் என தெரிவித்தார்.

    Next Story
    ×