என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும்- ராகுல்காந்தி கோரிக்கை
- மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.
- ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.
மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.
தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.
மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இதனையடுத்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் இந்தியாவின் பெருமைக்குரிய மாநிலமாகும். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க ஒவ்வொரு தேசபக்தரும் உதவ வேண்டும். பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அது மக்களுக்கு சற்று ஆறுதலை தரும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.