என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
நீட் தேர்வு விவகாரத்தில் மவுனமான பிரதமர்: கபில் சிபல் தாக்கு
- நீட் தேர்வுக்கு எதிராக வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
- எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் தேர்வு தொடர்பாக வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் மற்றும் வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரம் தொடர்பாக வார்த்தைப் போர் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போன்றதாகும். எங்களது வாக்குப்பதிவு முறை குறித்து கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. பொறுப்பேற்க வேண்டிய அமைப்புகள் வெளிப்படையாக இல்லாதபோது ஜனநாயகம் போலியாவதோடு, ஊழல் செய்வதற்கான வழிகளும் அதிகரிக்கும் என்றார்.
இந்நிலையில், மாநிலங்களவை எம்பியான கபில் சிபல் நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கபில் சிபல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நீட் தேர்வு, குஜராத் மாடல், வெளிப்படையான ஊழல், வெளிப்படையான கையாளுதல், தயவுசெய்து கவனிக்கவும்: மோடிஜியின் 'சுத்தமான' மௌனம் என பதிவிட்டுள்ளார்.