என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- அமலாக்கத்துறை கைது செய்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
- உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதும், ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாத் ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது இந்த பெஞ்ச்.
உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியால் மிகவும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் விசாரணை நிலை அல்லது எந்வொரு விசாரணையிலும் விசாரணை நீதிபதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பின், ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
ராஞ்சியின் பார்கெய்ன் பகுதியில் 8.86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதலமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது.
பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஹேமந்த் சோரன் ஆஜராக நிலையில், அவரது வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை ஜனவரி 31-ந்தேதி கைது செய்தது.