என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
முலாயம் சிங் யாதவ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
- உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்
- மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது
புதுடெல்லி:
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82), பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
நுரையீரல் தொற்று தீவிரமடைந்ததையடுத்து, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் அவரை கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.
82 வயது நிரம்பிய முலாயம் சிங் யாதவ் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் ராணுவ மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார். உத்தர பிரதேச சட்டசபைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். தற்போது மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார்.