search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணியின் வெற்றி முடிவு அல்ல, தொடக்கம்: உத்தவ் தாக்கரே சொல்கிறார்
    X

    மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணியின் வெற்றி முடிவு அல்ல, தொடக்கம்: உத்தவ் தாக்கரே சொல்கிறார்

    • மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி- சரத் பவார்.
    • மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்- காங்கிரஸ் தலைவர்.

    மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக, தேசியவாத காங்கிரஸ்- அஜித் பவார், சிவசேனா- ஏக்நாத் ஷிண்டே) மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

    பாஜக 9 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணிக்கு மொத்தம் 17 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

    30 இடங்களில் மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்- சரத்பவார், சிவசேனா-உத்தவ் தாக்கரே) வெற்றி பெற்றது. பிரிந்து சென்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என இந்த கூட்டணி நம்புகிறது. மேலும், விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி நீடிக்கும் என எதிர்பார்க்கிறது.

    இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில் "மக்களவை தேர்தல் வெற்றி மகா விகாஷ் அகாதிக்கான முடிவு அல்ல. தொடக்கம்" என்றார்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் சவான், "மக்களவை தேர்தல் முடிவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் விரைவில் அரசு மாறும்" என்றார்.

    சரத் பவார் "மகா விகாஸ் அகாதிக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கிய பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவ சேனா (UBT) 9 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    உத்தவ் தாக்கரே கட்சி 21 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) 10 இடங்களில் போட்டியிட்டது.

    பாஜக போட்டியிட்டு 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    Next Story
    ×