என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இன்றைய விசாரணை நிறைவு- சோனியா காந்தி மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு
- சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து அமலாக்கத்துறை சம்மன்
- பண பரிமாற்றம் தொடர்பாக சோனியா காந்தியிடம் அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர்.
புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து இன்று (ஜூலை21) விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.
அதன்படி இன்று மதியம் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார். இன்றைய விசாரணை நிறைவடைந்ததையடுத்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றார்.
சோனியா காந்தியிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 25ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.