search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணாலியில் இருந்து கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்த வாலிபர்
    X

    மணாலியில் இருந்து கன்னியாகுமரி வரை ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்த வாலிபர்

    • நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் 100 நாட்களில் பயணத்தை முடித்துள்ளார்.
    • தனது பயணத்தின் போது சந்தித்த பல்வேறு சவால்களையும் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

    நாட்டின் ஒரு பகுதியில் இருந்து தொலைதூரத்தில் உள்ள மற்றொரு இடத்திற்கு மக்கள் பல்வேறு போக்குவரத்து முறைகளில் பயணம் செய்து வருகிறார்கள். சிலர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன முறைகளிலும் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலியில் இருந்து கன்னியாகுமரி வரை ஒரு வாலிபர் ஸ்கேட்டிங் போர்டில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. தொழில் முறை ஸ்கேட்டிங் போர்டு வீரரான ரித்திக் கிராட்ஸெல் என்பவர் கடந்த ஜனவரி 7-ந்தேதி தனது முதல் நாள் பயணத்தை தொடங்கி உள்ளார்.

    தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் 100 நாட்களில் பயணத்தை முடித்துள்ளார். கடந்த 1-ந் தேதி கன்னியாகுமரியில் அவரது பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தனது பயணத்தின் போது சந்தித்த பல்வேறு சவால்களையும் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், ஒரு சில இடங்களில் கூகுள் மேப் வேலை செய்யாதது, தேசிய நெடுஞ்சாலைகளில் அடர்ந்த மூடுபனி போன்றவை சவாலாக அமைந்ததாக கூறி உள்ளார். இந்த வீடியோக்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



    Next Story
    ×