என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மம்தா பானர்ஜி கூறுவது ஆதாரமற்றது- நிர்மலா சீதாராமன் விளக்கம்
- மம்தா பானர்ஜியின் குற்றச் சாட்டுகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.
- கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில கோரிக்கை குறித்து தான் பேசும்போது 'மைக்' அணைக்கப்பட்டதாக கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். வெளியே வந்த பின்னர் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் குற்றச் சாட்டுகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா தனது முழு நேரமும் பேசினார். எங்கள் மேஜைகளுக்கு முன்னால் உள்ள திரை நேரத்தைக் காட்டியது. சில மாநில முதல்-மந்திரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசினார்கள். யார் பேசும்போதும் 'மைக்' அணைக்கப்படவில்லை, குறிப்பாக மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பேசும்போது அவ்வாறு நடக்கவில்லை. அது ஆதாரமற்றது.
இதுபோன்ற ஆதாரமற்ற விஷயங்களை வெளியில் சொல்வதால், இந்தியா கூட்டணியை வேண்டுமானால் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.
மேற்கண்டவாறு அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் மம்தாவின் இந்த குற்றச்சாட்டை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் மறுத்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களின் அகர வரிசைப்படி மம்தா பானர்ஜி பேசுவதற்கு மதியத்துக்கு மேல்தான் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மதியத்துக்கு முன்பே பேச அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் அதை நினைவூட்டுவதற்காக கூட்டத்தை வழிநடத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மைக்கை தட்டினார். உடனே மம்தா பானர்ஜி தனது பேச்சை நிறுத்தி விட்டு வெளிநடப்பு செய்தார்.
ஆனாலும் மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-மந்திரிகள், துணைநிலை கவர்னர்கள் என 26 பேர் பங்கேற்றனர். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 10 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கவில்லை. இதனால் அவர்களுக்குத்தான் இழப்பு.
பீகாரில் சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் முதல்-மந்திரி நிதிஷ்குமார் அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அவரால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை.
நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மாநிலங்கள் தனது மாவட்டங்களுக்கு கூடுதல் செலவிட வேண்டும் எனவும், அப்போதுதான் அவை வளர்ச்சியின் இயக்கிகளாக இருக்க முடியும் எனவும் கூறினார்.
கூட்டத்தில் சில மாநிலங்கள் தெரிவித்த 'பூஜ்ஜிய வறுமை' யோசனையை பாராட்டிய பிரதமர் மோடி, இது கிராம அளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கிராமங்களை ஆய்வு செய்து 'பூஜ்ஜிய வறுமை கிராமமாக' அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்