search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புஜ்பால்- சிவ சேனா இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை- ராவத்
    X

    புஜ்பால்- சிவ சேனா இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை- ராவத்

    • மக்களவை தேர்தலில் நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.
    • மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். இரண்டு கிடைக்காததால் அதிருப்பு எனத் தகவல்.

    நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    இந்த கூட்டணிக்கு நினைத்ததுபோல் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அஜித் பவார் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.-க்கள் சரத் பவார் கட்சிக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே அஜித் பவார் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் சகான் புஜ்பால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்த நடைபெற்ற வருவதாக தகவல் வெளியானது.

    ஆனால் உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், அப்படி பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில் "சகான் புஜ்வால்- சிவசேனா (யுபிடி) இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக வந்த செய்தியில் ஒரு துளி கூட உண்மையில்லை. பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை" என்றார்.

    ஒன்றாக இருந்த சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் புஜ்பால். இவர் சிவசேனாவில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பின் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை கைப்பற்றிய போது அவருடன் சென்றார்.

    மாநிலங்களவை எம்.பி. கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித் பவார் தன் மனைவியை நிறுத்தியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே நாசிக் தொகுதியில் போட்டியிட விரும்பியபோது அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    Next Story
    ×