search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்க பேரணியில் பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்னையர் தின பரிசு
    X

    மேற்கு வங்க பேரணியில் பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்னையர் தின பரிசு

    • மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன.
    • பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில், அன்னையர் தின பரிசாக பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடியுடன் இருக்கும் உருவப்படத்தை தொண்டர்கள் பரிசாக வழங்கியுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த தாய் ஹீராபென் மோடியின் உருவப்படத்தை பரிசாகப் பெற்றார்.

    பரிசுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "மேற்கத்திய நாடுகள் இன்று அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன, ஆனால் இந்தியாவில் நாங்கள் ஆண்டு முழுவதும் தாய், காளி, துர்கா மற்றும் தாய் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2022ம் ஆண்டில் டிசம்பர் 30ம் தேதி அன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் படேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சமீபத்தில், 3ம்கட்ட தேர்தலில் அகமதாபாத் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்த பின்னர், தனது மறைந்த தாயை நினைவு கூர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டார்.

    2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் தனது தாயார் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×