என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒரே கட்சி ஒரே ஆட்சி - பாஜகவை விமர்சித்த உத்தவ் தாக்கரே
- பாஜக கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை.
- இந்த நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பாஜக தலைவர் நட்டா கூறியிருந்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி சறுக்கினாலும் சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் மிகப்பெரிய வெற்றி தொடர்பாக பேசிய உத்தவ் தாக்கரே, "2020-ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றின்போது மகாராஷ்டிரா மக்கள் ஒரு குடும்பத் தலைவனாக எனது பேச்சை கேட்டனர். ஆனால் இப்போது என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றது. அடுத்த 4 மாதங்களில் ஆளும் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது என்று தெரியவில்லை. பாஜக கூட்டணியின் வெற்றியை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏக்நாத் ஷிண்டே, இனி பட்னாவிசின் கீழ் தான் பணிபுரிய வேண்டும். மகாராஷ்டிரா முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்ய வேண்டும்.
இந்த நாட்டில் ஒரே கட்சி தான் இருக்கும் என பாஜக தலைவர் நட்டா கூறியிருந்தார். தற்போது நடப்பதை பார்க்கும்போது இந்த நாடு ஒரே கட்சி ஒரே ஆட்சி என்ற திசையில் நகர்வது போல் தெரிகிறது. மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 89 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.